11779 தகவம் பரிசுக் கதைகள் – தொகுதி 3.

தகவம். கொழும்பு 6: தகவம் கதைஞர் வட்டம், 40, லில்லி அவென்யூ, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்).

xvi, 298 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-3939-00-5.

கடநத 2009-2013 வரையிலான ஐந்தாண்டுக் காலப்பகுதியில் வெளிவந்து, தகவம் அமைப்பினரின் சிறுகதை மதிப்பீட்டில் முதற் பரிசினையும் சிறப்புப் பரிசினையும் பெற்ற சிறுகதைகளை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்நூலில் 18 ஈழத்துச் சிறுகதைப் படைப்பாளிகளின் அறிமுகக் குறிப்புகளுடன் அவர்கள் எழுதிய 26 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குரிய சிறுகதைகளின் செல்நெறிகளைக் கண்டறியும் உரைகல்லாக இத்தொகுப்பு அமைகின்றது. தாமரைச்செல்வி (கசிந்துருகி கண்ணீர் மல்கி), யோகேஸ்வரி சிவப்பிரகாசம் (மரண அறிவித்தல்), புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் (தாச்சிச் சட்டி), வி.ஜீவகுமாரன் (கிராமத்துப் பெரிய வீட்டுக்காரி, நாணயம், மாங்கல்யம் தந்துதானே, நானும் எனதும், பிள்ளைபிடிகாரரும் பணக்கார அகதிகளும் அண்ணாவாகிய நானும், இடைவெளி), ச.முருகானந்தன் (சுடலை ஞானம்), கே.ஆர்.டேவிட் (முதலாவது அத்தியாயம் நிறைவுபெறுகிறது, மண் போறணை), சுதர்ம மகாராஜன் (குளம்), பதுளை சேனாதிராஜா (கோணல் சித்திரங்கள்), கெக்கிறாவ ஸஹானா (அங்கும் இங்கும்), க.சட்டநாதன் (சடங்கு), பவானி சிவகுமாரன் (நிழல் கொஞ்சம் தா, மீண்டும் புதிதாய்ப் பிறப்போம்), மருதம் கேதீஸ் (ஒளவைதரு முகிலி), சந்திரகாந்தா முருகானந்தன் (உண்மை வலி), தாட்சாயணி (பொய்மையும் வாய்மையிடத்து, உள்ளேதான் உள்ளாயோ), எம்.எஸ்.அமானுல்லா (ஒரு பெண்ணின் கதை), தேவமுகுந்தன் (மாறுதல்), சித்தாந்தன் (நூறாயிரம் நுண்டுளைகளால் பொறிக்கப்பட்ட பெயர்), கே.எஸ்.சுதாகர் (இரு வேறு பார்வைகள்) ஆகியோரின் தேர்ந்த கதைகள் இத்தொகுப்பில் தெரிவாகியுள்ளன.

ஏனைய பதிவுகள்