கண.மகேஸ்வரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
x, 94 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-56-5.
குடும்பச் சூழல் மற்றும் சமூகத்தளத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அலசி மனித வாழ்வியலைப் பதிவாக்கியுள்ளது தீர்வுதேடும் நியாயங்கள் என்ற சிறுகதைத் தொகுதி. அப்பாச்சி, ஆதிக்கம், அதிர்வுகள், ஆக்கிரமிப்பு, அவஸ்தை, தருணம், தீர்வு தேடும் நியாயங்கள், வேளை வந்த வேளை, காலச் சிதறல்கள், தனிக்குடித்தனம், மண்ணும் மனையும், அந்திமம் ஆகிய பன்னிரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் ஜீவநதி வெளியீட்டுத் தொடரில் 68ஆவது நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61493).