சு.சிவராசா. யாழ்ப்பாணம்: சு.சிவராசா, நந்தாவில் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பதிப்பகம், 681, காங்கேசன்துறை வீதி).
xviii, 89 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955- 43441-0-5.
நாவற்குழியைச் சேர்ந்த புராணகலாவித்தகர், கலாபூஷணம் சு.சிவராசா அவர்களின் சிறுகதைகளின் தொகுப்பு இது. இவர் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் துணை நிலைச் செயலாளராகப் பணியாற்றுகின்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல்துறை ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பதவி வகித்தவர். துர்அதிர்ஷ்டவசமாக தனது இளம்பிராயத்தில் கண்பார்வையை இழந்தவர். கைதடி நபில்ட் பாடசாலையில் பகுதிநேர ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நூலில் காலம் வந்தால் வாழ்வு வரும், அவர்கள் பேருந்துக்காகக் காத்திருக்கிறார்கள், இதுவும் ஒரு சமூகக் கதை, சொல்லித் தெரிவதில்லை, சாத்தியது மனக்கதவு, தெளிவுபெற்ற மதியினாய், புத்தகம் சொன்ன புத்திமதி, ஒரு புதிய தரிசனம், காதல் கவிதை சுகமானது, அவளுக்கும் வானம் வசப்படும், வாய்ப்புள்ள போதே கழுத்தை நீட்டிவிடு, அம்மன் கோயில் திருவிழா, ஒரு வெள்ளைப் பிரம்பின் கதை, வாடகை வீடு, கனவு மெய்ப்பட வேண்டும் ஆகிய 15 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் பற்றிப் பேசுவதாக உள்ளன.