வல்வை வே.சின்னையா. சிங்கப்பூர்: வல்வை.வே.சின்னையா, 1வது பதிப்பு, 1930. (சிங்கப்பூர்: அசோகா அச்சு இயந்திரசாலை).
(8), 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13.5 சமீ.
இனிய கற்பிதக் கதைகள் என்ற உப தலைப்புடன் அன்பின் பெருமையையும், வீரத்தின் மாண்பையும், மெய்மையின் உயர்வையும், ஒழுக்கத்தின் சிறப்பையும், பொய்மையின் இழிவையும், விளக்கும் ஐந்து கதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது கதைகள், நீதிநெறிகளை மக்கள் மனதில் பதியம்வைக்கும் நோக்குடன் அவற்றை ஆக்க இலக்கியங்களினூடாக ‘கற்பனா சரித்திரங்களாக’ நீதிநெறிச் செய்யுள்களை இடையிடையே சேர்த்து இக்கதைகளை ஆக்கியிருக்கிறார். ஐந்து கதைகளுக்கும் தலைப்பு இடப்பட்டிருக்கவில்லை. முதலாவது கதை, இரண்டாவது கதை என்றவாறாகத் தலைப்பிடப்பட்டுள்ளன. மேலும் இரண்டாவது கதைக்கு உபதலைப்பாக ‘சந்திரசேகரன் தனது சினேகிதனோடு சம்பாஷித்த சம்பாஷணை’ என்ற வரிகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து சென்று சிங்கப்பூரில் தொழில்நிமித்தம் வாழ்ந்திருந்த வல்வை வே சின்னையா, சிங்கப்பூரின் தமிழ்ச் சிறுகதை முன்னேடியாகக் கருதப்படுகின்றார். 1936இல் இவர் தமிழணங்கு அல்லது இளநகைச் சிறுமி என்றொரு கதையையும் நூலுருவாக்கியிருக்கிறார்.