நீர்வை பொன்னையன். கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 18, 6/1 கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுன் 2016. (கொழும்பு 6: R.S.T.Enterprises, 114, W.A.சில்வா மாவத்தை).
130 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1810-27-6.
இந்நூலில் நீர்வை பொன்னையன் எழுதிய பதினாறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பாஞ்சான், சங்கமிப்பு, காத்திருப்பு, பிணைப்பு, சிதைவு, வட்டத்திற்குள் வட்டம், பக்குவம், பச்சோந்தி, வாரிசு, கான்சர், பூமறாங், பந்தபாசம், அஸ்தமனத்தில் ஜனனம், நாய்வால், இந்திரா, அம்பியுலன்ஸ் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இந்நூல் ஆசிரியரின் பதினொராவது சிறுகதைத் தொகுதியாகும். இந்திரா என்னும் கதை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்குப் பாக்கிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகளால் நடாத்தப்பட்ட போராட்டத்தை மையமாகக்கொண்டு புனையப்பட்ட கதை. பக்குவம், பந்தபாசம் ஆகிய இரு கதைகளும் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்களைப் பற்றியது. ஏனைய கதைகள் எமது மண்ணின் மைந்தர்கள் பற்றிய புனைவுகள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61294).