க.சட்டநாதன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மே 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
(8), 169 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-42-8.
வேலணையில் ஏப்ரல் 22, 1940 இல் பிறந்த க.சட்டநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியர். இவர் எழுதிய பொழிவு, நனைந்த நினைவுகள், சிறிசுகள், அழுத்தம், நாணயம், தெரிந்தும் தெரியாமலும், வெந்து தணிந்தவை, தவிப்பு, மீறல்கள், சடங்கு, அவரும் அவர்களும், அவள் நீரின் நிறம் ஆகிய 12 சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பெண்மை, காதல், அன்போடு கூடிய கணவன்-மனைவி உறவு, பாலியல், சிறுவர்களின் குழந்தைப்பருவ இன்ப நாட்கள், சாதியம் சார்ந்த விடயங்கள் எனப் பலதை உள்ளடக்கி இக்கதைகளை வடித்துள்ளார். இது ஜீவநதியின் 60ஆவது வெளியீடு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61511).