11798 மீன்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்.

தெளிவத்தை ஜோசப் (மூலம்), ஜெயமோகன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், பழைய எண் 123A, புதிய எண் 243யுஇ  திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013, (சென்னை 5: சாயி தென்றல் பிரின்டர்ஸ்).

110 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82648-64-2.

தெளிவத்தை ஜோசப் எழுதிய மீன்கள், இருப்பியல், மனிதர்கள் நல்லவர்கள், பயணம், கத்தியின்றி ரத்தமின்றி, மழலை, அம்மா, பாவ சங்கீர்த்தனம், சிலுவை ஆகிய ஒன்பது தேர்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலில் முக்கியமான மலையக எழுத்தாளர்களில் ஒருவர் தெளிவத்தை ஜோசப். இலங்கை மலைநாட்டு தமிழர் பற்றிய ஆக்க இலக்கியப் படைப்புகளை எழுதும்போது அவர்களின் வட்டார மொழியை ஆடம்பரமற்ற எளிமையான மொழியில் சொல்வதுதான் அவரது வழக்கம். ஆனால் அவரது படைப்பின் அடிநாதமாக இருப்பது எந்த நாட்டு மனிதர்களுக்கும் பொருந்தும் சாதாரண மனிதர்களின் யதார்த்தமேயாகும்;. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54686).

ஏனைய பதிவுகள்

12367 – கல்வியியலாளன்: தொகுதி 01, ஒக்டோபர் 2003.

பரராஜசிங்கம் இராஜேஸ்வரன், நடராசா திருவாசகன் (பிரதம ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கல்வியியல் வெளியீட்டு நிலையம் (நுனரஉயவழையெட Pரடிடiஉயவழைn ஊநவெசந), 257, பலாலி வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிறிண்டர்ஸ், 717,