11800 முகங்கள்: சிறுகதைத் தொகுப்பு.

பொன்.குலேந்திரன். தமிழ்நாடு: ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் கட்டிடம், காந்திநகர் மெயின் சாலை, வத்தலகுண்டு-642202, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (சென்னை: பாரதி அச்சகம்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 22×14 சமீ., ISBN: 978-81-930722-6-4.

பொன்.குலேந்திரன் யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில்  பௌதிகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்வேறு அரபு, ஐரோப்பிய நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் பொறியியலாளராகப் பணியாற்றி இறுதியாக கனடாவில் டெலஸ் தொலைத்தொடர்பு தாபனத்தில் சிரேஷ்ட முகாமையாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்றவர். கனடாவில் குவியம் என்ற இணையத்தளத்தை நடத்துபவர். முகங்கள் இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இதிலுள்ள கதைகள் தான் தன் வாழ்வில் சந்தித்தவர்களையே விவரணக் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதியதுபோல நெஞ்சுக்கு நெருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளன. சந்திக்கடை சங்கரப்பிள்ளை, வைத்தியர் வைத்திலிங்கம், சண்டியன் சங்கிலி இஸ்மாயில், சின்னமேளக்காரி சிந்தாமணி, நாட்டாண்மை நாச்சிமுத்து, நாவிதர் நாகலிங்கம், பொலிஸ்காரன் பொடி அப்புஹாமி, பெட்டிசன் பெரியதம்பி, அரசாங்க அதிபர் அபயசேகர, பியூன் பிரேமதாசா, கேப்ரியல், மரக்குதிரை முகம்மது, மங்கையம்மாள், வேலி, பஞ்சிகாவத்தை புஞ்சி பெரேரா, சிவகுருநாதனின் இறுதிப் பயணம், கிளாக்கர் கிருஷ்ணபிள்ளை, காஸ் மணியம், பொறியியலாளன் சு.மகாதேவன், வேலுப்பிள்ளையின் வேள்வி, அன்வர் பின் அகமது ஆகிய தiலைப்புகளில் எழுதப்பட்ட  21 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கதைகளின் களங்களும் இலங்கையின் முக்கிய இடங்களான புத்தளம், கொழும்பு புறக்கோட்டை, கொழும்பு கறுவாக்காடு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிகழ்கின்றன.

ஏனைய பதிவுகள்