செ.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: அபி பதிப்பகம், 196/23, தலுவில் ஒழுங்கை, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்; கங்கை பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி).
iv, 95 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-44890-3-5.
பொருளியல் வல்லுநரான கலாநிதி செ.சந்திரசேகரம் பொருளியலுக்கு அப்பாலும் தன் ஆய்வுப்பரப்பை விரிவாக்கியவர். ‘தமிழ் இலக்கியங்களில் பெண்களின் குணங்கள்’ பலராலும் விதந்தரைக்கப்பட்ட இவரது நூலாகும். வடக்கின் வசந்தங்கள் ஆசிரியரின் சிறுகதைத் தொகுப்பாகும். வசந்தத்தைத் தேடி, ஸாரும் அண்ணையும், ரெக்னொலொஜி, டெத் செர்ட்டிபிக்கெற், இயம வீடு, லீசிங் 7 பச்சோந்திகள், பட்டத்தின் வலிகள், வேலியும் பயிரும், அஞ்சலி ஆகிய 10 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை ஆசிரியரின் அனுபவங்களின் புனைவு வடிவமாகவே காணப்படுகின்றன. வாழ்வின் உண்மைச் சம்பவங்களை சுவைபட இப் புனைவுகள் பதிவுசெய்திருக்கின்றன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001425).