மலரன்னை (இயற்பெயர்: திருமதி காசிலிங்கம் அற்புதராணி). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, ஆவணி 2015. (யாழப்பாணம்: ஆரு பிரிண்டர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு).
x, 130 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43209-0-1.
சமூக விழுமியம், அன்பும் பண்பும் நிறைந்த ஒழுங்கான குடும்ப அமைப்பு, கட்டுக்கோப்பான நியதிமுறைகளுக்கமைந்த மானுட நேயம் மிகுந்த வாழ்வு என்பன அடிநாதமாக ஒலிக்கின்ற கதைக்களங்களைக் கொண்ட சிறுகதைகள் இவை. வேர் பதிக்கும் விழுதுகள், நாளைய பொழுது நலமாக, கண் கெட்ட பின், மண்ணுக்குள், முன்னெச்சரிக்கை, ஆத்ம அந்தரங்கம், கந்தப்ப வாத்தியார், காலம் வெல்லும், பகட்டுப் பசி, சுகவாழ்வு, அம்மாயி, வாழ்விலும் சாவிலும், தப்புக் கணக்கு, நெஞ்சம் மறப்பதில்லை, தாய்மைப்பேறு, ஆத்மசாந்தி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தாய்மைப் பேறு, ஆத்மசாந்தி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய கதைகள் யுத்த வடுக்களைச் சுமந்து நிற்கின்றன. சமூகப்புரட்சி, பாசம், நேசம், நெருக்கம் இவற்றின் இழப்பினால் ஏற்படும் துயரங்களை அம்மாயி, மண்ணுக்குள் ஆகிய கதைகள் சித்திரிக்கின்றன. கணவன்-மனைவி, குடும்ப அங்கத்தவர்களுக்கிடையேயான நெருக்கம் என்பவற்றை வேர் பதிக்கும் விழுதுகள், சுகவாழ்வு, வாழ்விலும் சாவிலும், ஆத்ம அந்தரங்கம் போன்ற சிறுகதைகள் பிரதிபலிக்கின்றன. ஈழத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்களுள் ஒருவரான மலரன்னையின் சிறுகதைத் தொகுதி இது. மலரன்னை அவர்கள் மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் அவர்களின் மகள் என்பதும் எழுத்தாளர் மலரவனின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.