தியத்தலாவ எச்.எஃப். ரிஸ்னா. கொழும்பு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, நவம்பர் 2012.(அச்சக விபரம் தரப்படவில்லை).
114 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52975-0-9.
இலங்கையின் இஸ்லாமிய மலையகப் பெண் படைப்பாளிகளில் தியத்தலாவை எச்.எஃப். ரிஸ்னா குறிப்பிடத் தகுந்தவர். நூலுருவில் வெளிவரும் இவரது முதலாவது படைப்பாக இச்சிறுகதைத் தொகுதி அமைகின்றது. அழகன், பயணங்கள், காதல் கல்வெட்டு, விதி, தோல்வி, மாற்றம், வரம், உறவகள், சிதைவு, வேதனை, தவிப்பு, வாக்குறுதிகள், தொலைந்த கவிதை, கண்ணீர், சொந்தம், சிட்டுக் குருவி, தெளிந்த வானம், என்னை அறிந்த போது, கனவுகள், ஓயாத நினைவலைகள், கானல்நீர் ஆகிய 21 சிறுகதைகளை இந்நூல் அடக்கியுள்ளது. சமூகச் சீர்கேடுகள், வறுமை, அதிகாரப்போக்கு, ஆணவம், கர்வம், ஏமாற்றுதல், வஞ்சம் தீர்த்தல் போன்ற குணாதிசயங்களை பாத்திரங்களினூடாக வெளிப்படுத்தி விளைவுகளைத் தண்டனைகளாக வழங்குகின்றார். குழந்தைத் தொழிலாளர்கள், பெண்களின் அவலநிலை, சீதனக் கொடுமை, போர் அவலம், மலையகப் பிரச்சினை, போன்ற பலவற்றையும் தனது சிறுகதைகளின் பேசுபொருளாக்கியுள்ளார்.