எஸ்.ஸ்ரீதரன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, இணை வெளியீடு, லண்டன்: தமிழியல், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்).
395 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய ரூபா 750., அளவு: 24.5×19 சமீ., ISBN: 978-93-81969-85-4.
இத்தொகுப்பில் ஸ்ரீதரனின் சிறுகதைகள், குறுநாவல்கள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. பதிப்புரை, ஸ்ரீதரனின் படைப்பு மனம், ஸ்ரீதரனின் படைப்புலகம், முன்னுரை ஆகியவற்றைத் தொடர்ந்து அவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. மூலஸ்தானம் (தரிசனங்கள்- பொன்.இரத்தினபாலன் தொகுத்திருந்த பேராதனைப் பல்கலைக்கழகத் தொகுப்பில் மே 1973இல் இடம்பெற்றது), ராமசாமி காவியம் (அலை 21ஆவது இதழில் 1974இல் பிரசுரமானது), ஒரு பஸ்தோப்புக் குயில் பாட்டு (1975), கமலம் (1974-76 காலப்பகுதியில் எழுதப்பெற்று பிரசுரமாகாதது), காவற்காரர்கள் (அலை-25, 1976), நிர்வாணம் (கணையாழி, ஒக்டோபர்-நவம்பர் 1977), இவர்கள் வெளியே இருக்கிறார்கள் (மல்லிகை – மே 1978), ஒரு புதிய யுகத்தை நோக்கி (கணையாழி, 1979), சொர்க்கம் (திசை, ஜுன்-ஜுலை 1989), இரண்டாயிரத்து ஒன்று (நாழிகை, மார்ச் 1994), தொடர்புகள் (நியூஹாம் தமிழர் நலன்புரிச் சங்க மலர், 1996), துணை அகதி (கிழக்கும் மேற்கும், 1997), இராமாயண கலகம் (கண்ணில் தெரியுது வானம், 2001), அம்பலத்துடன் ஆறு நாட்கள் (கண்ணில் தெரியுது வானம், 2001), விஸ்வ சம்பவம் (காலம்-16, ஜுன் 2002) ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பகுதியில் ஸ்ரீதரனின் கதைகள் பந்றிய சில விமர்சனங்களை க.சட்டநாதன், அநு.வை.நாகராஜன், மதி கந்தசாமி, ரெ.கார்த்திகேசு ஆகியோர் எழுதியிருக்கின்றனர். இத்தொகுப்பிற்கான ஓவியங்களை லண்டனிலிருந்து கே.கிருஷ்ணராஜா வரைந்துள்ளார். அமெரிக்காவின் Central State University யில் நீர்வள முகாமைத்துவத்தின் சர்வதேச மையத்தில், நீர்வள முகாமைத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றும் இலங்கையரான பேராசிரியர் எஸ்.ஸ்ரீதரன், பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று பொறியியல் விஞ்ஞானியானவர்.