11810 அவள் பெய்கிறாள்: மொழிபெயர்ப்பு மலையாளச் சிறுகதைகள்.

பி.கே. பாறக்கடவு (மiலாள மூலம்), அல். அஸூமத் (தமிழாக்கம்). வெல்லம்பிட்டிய: அல்.அஸ{மத், இல.50, கோத்தமி மாவத்தை, வெலேவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 14: பிரின்ட் சிட்டி).

xiv, 95 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-52134-5-5.

பி.கே.பாறக்கடவு, மலையாள இலக்கியவாதி. இவரது குறுங்கதைகள் மிகவும் பிரசித்தமானவை. அவள் பெய்யுன்னு என்ற தலைபபில் அவர் வெளியிட்ட குறுங்கதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளஅவரது தேர்ந்த கதைகள்  இலங்கையில் வாழும்  கேரள வாரிசாகிய அல் அஸூமத் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கலாபூஷணம் அல் அஸ_மத்  கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் மாத்தளையைச் சேர்ந்தவருமான பிரபல எழுத்தாளர். புகழ்மிக்க ஈழத்துக் கவிஞர். 1942.11.22 இல் பிறந்த இவரது இயற்பெயர் பொன்னையா வேலாயுதம். தந்தையார் கேரளத்தின் நெய்யாற்றின் கரையைச் சேர்ந்தவரும், கே.வீ.ராமன் நாயர் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான கே.வீ.பொன்னையா. இவரது தாய் மரியாயி. 1960-1964 காலப்பகுதியில் எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெகிவளை தொழில்நுட்பக் கல்லூரியின் வணிகப் பிரிவில் முகாமையாளராக 1978 வரை பணியாற்றினார்.

ஏனைய பதிவுகள்

15064 சாரதியம் : விவேகசிந்தாமணியின் 135 பாடல்கள் உரையுடன்.

சபாபதி முதலியார் (பரிசோதித்தது). யாழ்ப்பாணம்: அமரர் வைத்திலிங்கம் குருசாமி நினைவு வெளியீடு, உதயசூரியன் வீதி, உடுவில், 1வது பதிப்பு, நவம்பர் 2004. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி). (2), 46 பக்கம்,