கே.ஏ.அப்பாஸ் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 4: கண்ணகி பதிப்பகம், மயிலாப்பூர், 1வது பதிப்பு, ஜனவரி 1956. (சென்னை 14: மாருதி பிரஸ், இராயப்பேட்டை).
170 பக்கம், விலை: ரூபா 2.80, அளவு: 18×12 சமீ.
தென்னிந்திய மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்த சிறுகதைத் தொகுதி. கே.கணேஷ் தமிழாக்கம் செய்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகவும் இந்நூல் அமைகின்றது. வட இந்திய எழுத்தாளரான கே.ஏ.அப்பாஸ் (குவாஜா அஹமட் அப்பாஸ்) குங்குமப்பூ, என் குடை, சிட்டுக் குருவிகள், அநாமதேய அகதி, சில்வியா, கொடி, பிரதிபிம்பம், அரிசி, பாதகமலம், ஒரு வேடிக்கை ஆகிய தலைப்புகளில் எழுதிய பத்துச் சிறுகதைகள் இவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31093).