11812 சமகால சிங்களச் சிறுகதைகள்: சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

மேமன்கவி, கமல் பெரேரா, டெனிசன் பெரேரா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, இல. 40, புத்கமுவ வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு: அச்சகப் பகுதி, செலசினே தொலைக்காட்சி நிறுவனம்).

(12), 13-170 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7537-02-3.

இலங்கையில் 2010.11.25ஆம் திகதிய 1681/3 வர்த்தமானி அறிவித்தலின்கீழ் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு உருவாக்கப்பட்டது. அரச கரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்பன இந்த அமைச்சின் கீழ் செயற்பட்டன. இந்த அமைச்சின் விடயப் பரப்பை உள்ளடக்கக்கூடிய வகையில் போதிய நிதிவளங்கள் கிடைக்காத நிலையிலும்கூட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை அமுல்படுத்தினார். குறிப்பாக அரச நிறுவனங்களில் இருமொழிக் கொள்கையை அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மும்மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தியது. அத்துடன் சமகாலச் சிங்கள-தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து இரு சாராரிடையேயும் இலக்கியப் பரிவர்த்தiனையை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒரு அங்கமாகவே இச்சிறுகதைத் தொகுதி உருவாகியுள்ளது. டெனிசன் பெரேரா (தாய் வீட்டுப் புதையல்), பியசீலி விஜயமான்ன (நோனாச்சி), ஜயதிலக கமலவீர (இருண்ட வானம்), கெத்லின் ஜயவர்தன (முகமூடி நடனம்), கமல் பெரேரா (அரசன்), எரிக் இலயப் ஆரச்சி (அதிகாலை வேளையில்), கீர்த்தி வெலிசரகே (டப்பான்), யசேந்திரா ரணவக்க (சக்கரவேல்), அனுரசிரி ஹெட்டிகே (சின்ன தேவதை), நிஸ்ஸங்க விஜேமான்ன (வெட்டுக்கிளிகள்), லியனகே அமரகீர்த்தி (புதிய லெட்சுமி), பியல் காரியவசம் (மனித வட்டம்) ஆகிய 12 சிங்களப் படைப்பாளிகளின்  சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15090 இந்து சமய வழிபாட்டுத் தகவல் திரட்டு.

காரை கு.சிவராஜ சர்மா. (மூலம்), பிரம்மஸ்ரீ லக்ஷ்சாமிதாந்த சத்தியோஜாதக் குருக்கள். யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ லக்ஷ்சாமிதாந்த சத்தியோஜாதக் குருக்கள், 6வது ஒழுங்கை, பால்பண்ணை வீதி, திருநேல்வேலி, இணை வெளியீடு: கொழும்பு 13: ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்,

14711 பொத்தானை வயல்.

A.C.M. இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 144 பக்கம், விலை: ரூபா 350.,