மார்ட்டின் விக்கிரமசிங்க (சிங்கள மூலம்), சபா.ஜெயராசா (தமிழாக்கம்). இராஜகிரிய: சரச பிரைவேட் லிமிட்டெட், 18/3, கிரிமண்டல மாவத்தை, நாவல, 1வது பதிப்பு, 2009. (பொறலெஸ்ஹமுவ: அஜித் பிரிண்டர்ஸ், 342, பழைய கெஸ்பாவ வீதி, ரட்டனபிட்டிய).
(14), 166 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 190., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0201-01-3.
மார்ட்டின் விக்கிரமசிங்க (29 மே 1890 – 23 ஜுலை 1976) சிறுகதை, நாவல், மற்றும் கட்டுரையாசிரியராகவும் திறனாய்வாளராகவும் பன்முகப் பரிமாணங்களைக்கொண்டு திகழ்ந்த ஓர் இலக்கியப் படைப்பாளி. சிங்கள இலக்கியம் நவீனமடைவதற்கு காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே உழைத்துவந்தவர். பிரித்தானிய ஆட்சி இலங்கையில் ஏற்படுத்திய பண்பாட்டுத் தாக்கங்களையும் நெருடல்களையும் இலக்கிய வீச்சுக்குள்ளே கொண்டுவருவதில் வினைத்திறனுடன் இயங்கியவர். அவரது மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞான எழுத்தாக்கங்கள் சிங்கள மொழியின் நவீனப்பாட்டுக்கு விசையூட்டின. 1924ம் ஆண்டு வெளிவந்த இலங்கையின் முதலாவது யதார்த்தபூர்வமான சிங்களச் சிறுகதைத் தொகுதியான (பெண்ணொருத்தி-Geheniyak) வெளியானதிலிருந்து 30 வருடங்களுக்குள் வெளிவந்த 108 சிறுகதைகளில் தேர்ந்த பத்துக் கதைகள் இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கேலி விளையாட்டு (வினோதாஸ்வாதய), திகழ் சுடுகாடு (கனத்த), காதல் (ஆதரய), அடிமைத்தளை (வஹல்லு), பணம் (சல்லி), தாய் (மவ), புத்தாண்டு பிறப்பதற்கு முன் (நரக் வூ பிட்டி பந்துண), பொத்தல் விழுந்த கோட் (இருணு கபாய), பெண் (கஹனியக்), அந்தோ அய்யாவின் விரப்பிரதாபங்கள் (பேகள்) ஆகிய தலைப்புகளில் இவை வெளிவந்து பிரபல்யம் பெற்றவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229833).