மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, ஜுன் 2015. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி).
(9), 146 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×13 சமீ., ISBN: 978-955-41614-4-3.
இந்த நாவல் முற்று முழுதாகச் சிறுவர்களைப் பற்றியும் அவர்களின் உரிமைகள் பற்றிய எண்ணக்கருவையும் பற்றிப் பேசுகின்றது. போரினாலும் ஏனைய காரணங்களாலும் அநாதைகளாக்கப்பட்ட, அநாதைகளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற சிறார்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையைத் தூண்டுகின்றது. அனைவருமே சம ஆற்றல்களுடன் பிறக்கிறார்கள். மொழி, மத, பால், உடல்ரீதியான வேறுபாடுகளைக்கொண்டு அவர்களை ஒரங்கட்டலாகாது. யாவரும் சம அந்தஸ்துடன் வாழவேண்டும். அதற்கு எமது சமுதாயத்தில் உள்ள பெரிய மனது படைத்தவர்கள் உதவவேண்டும் என்ற கருத்து நாவலில் இழையோடுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249445).