தெணியான். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21×14 சமீ.
இலங்கை வடமராட்சியை கதைக்களமாக கொண்டியங்கும் இந்நாவல் யாவும் கற்பனை என்று கடந்து செல்லமுடியாத யதார்த்தமான சமூக அவலங்களைப் பிரதிபலிப்பதுடன் ஒரு உலைக்களனாய் நின்று தவிக்கிறது. அதே சமயம் எளிய மொழியில் சாதிய இருப்பையும், அதன் அமைப்பையும், அது பற்றிய புரிதலையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்; வகையில் எழுதப்பட்டுள்ளது. முற்போக்கு சிந்தனைகள், சாதீயத்திற்கு எதிரான தீர்க்கமான குரல், பெண்களின் மன உலகின் வெவ்வேறு கோலங்கள் போன்றவற்றை தெணியான் தனது நாவலில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61442).
குடிமைகள்: நாவல்.
தெணியான். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
208 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-10-7.
‘இருளில் கிடந்து துன்பப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுநிலையை வெளி உலகம் அறியத் தகுந்த வண்ணம் எடுத்துச் செல்லவேண்டும், விழிப்புணர்வை ஊட்டவேண்டும் என்னும் அக்கறை எனக்கு உண்டு. அதனால் குடிமக்களாக வாழ்ந்துவரும் சவரத் தொழிலாளர் சமூகம் பற்றிச் சித்திரிக்கும் இந்த நாவலை எழுதியிருக்கின்றேன். சவரத் தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்துக் கிராமங்கள் தோறும் பெரும்பாலும் மிகக் குறைந்த தொகையினரான குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த அமைப்பு அவர்கள் வாழும் பகுதிகளில் அவர்களைப் பலவீனப்படுத்தி வைத்திருக்கின்றது. ஆதிக்க சாதி இந்த மக்களைத் தங்கள் ஆதிக்கத்துக்குள் அடக்கி வைத்துக் கொள்வதற்கு வெகு வாய்ப்பானதாகக் காணப்படுகின்றது. இந்தச் சமூக மக்களின் வாழ்வு நிலை அன்று எவ்வாறு இருந்து வந்தது? அதன் தொடர்ச்சியான வாழ்வு இன்று எவ்வாறு சாதியத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதனை இந்த நாவலுக்கூடாகச் சொல்லியிருக்கிறேன்.“ இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 29ஆவது நூலாக வெளிவந்துள்ளது.(இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66953).