11834 தழும்பு: இரு நாவல்கள்.

மா.பாலசிங்கம். கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, 25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2016.

196 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-3914-02-6.

வீடு வந்த வசந்தம், தழும்பு ஆகிய இரு நாவல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. வீடு வந்த வசந்தம், என்ற நாவல் இனப்பிரச்சினை, பேரினவாதம், போர்ச் சூழல், அரச பயங்கரவாதம், போன்றவற்றின் பின்னணியில் நகரும் கதையாகும். ஈழப்போரின் உக்கிரகாலத்தில் வடபுல மக்கள் பட்ட கஷ்டங்கள், இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை, குடும்பப் பிரிவு, புலப்பெயர்வு, கொழும்பு லொட்ஜ் வாழ்க்கை போன்ற பல்வேறு விடயங்கள் இந்நாவலில் பேசப்படுகின்றன. தழும்பு என்ற நாவல் சாதியம் தொடர்பானது. நாவலின் நாயகி கவிதா கொழும்பு அலுவலகமொன்றில் வேலை செய்கிறாள். சிங்களவர்கள் பெரும்பான்மையான அந்த அலுவலகத்தில் ஆரூரன் என்பவரைக் காதலிக்கநேர்கின்றது. ஆரூரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஒரு மரமேறியை மருமகனாக எற்க முடியாதென்பதை ஆரூரனிடமே சொல்லிவைக்கும் கவிதாவின் தந்தையின் சாதிய உணர்வுகளும் ஆரூரன்-கவிதாவின் காதலும் என்னவாகின்றன என்பதை கதையில் ஆரவாரமின்றிச் சொல்கிறார் ஆசிரியர். இரு நாவல்களும் மொழிநடை, கருத்துச் செறிவு, சிறந்த கதைப் பின்னல் என்பவற்றைக் கொண்டுள்ளன. புரவலர் புத்தகப் பூங்காவின் 38ஆவது வெளியீடு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61244).

ஏனைய பதிவுகள்

14612 தமிழோடு இசை பாடல்.

லயனல் திலகநாயகம் போல். ஆனைக்கோட்டை: திருமதி பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண். வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). xxiv, 81

9592 கவிதைச் சுரங்கம்.

நவ.பாலகோபால். கிளிநொச்சி: கிளிநொச்சி இலக்கிய வட்ட வெளியீடு, 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்). (2), 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட நவரத்தினராசா பாலகோபால்,