கேணிப்பித்தன் ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, மார்ச் 2015. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், இல.64 என். பீர் சாஹிபு வீதி).
vi, 183 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52086-9-7.
1950 முதல் 1967 வரையிலான ஒரு காலகட்டத்தை இந்நாவல் பதிவுசெய்கின்றது. சாதாரண சராசரி மனித வாழ்வு பற்றிப் பேசும் இந்நாவலில் ஆங்காங்கே சில வரலாற்றுப் பதிவுகளையும் சேர்த்துள்ளார். அன்றும் இன்றும் எமது சமூகத்தில் சுயநலமிகளின் ஆதிக்கமே வேரூன்றியிருப்பதை மேலும் இந்நாவல் பதிவுசெய்கின்றது. அமரர் வ.அ.இராசரத்தினம் எழுதிய ‘ஒரு வெண்மணல் கிராமம் காத்துக்கிடக்கிறது’ என்ற நாவலின் தொடர்ச்சியாக இந்நாவலைப் பார்க்கமுடியும் என்பது ஆசிரியரின் கருத்தாகும்.