11837 நெருப்பாற்றில் ஓர் நீலோற்பலம்.

க.சிவனடியான். வட்டுக்கோட்டை: க.சிவனடியான், சங்கரத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (யாழ்ப்பாணம்: திருச்செல்வி அச்சகம், தட்டா தெரு).

122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டை, சங்கரத்தையைச் சேர்ந்தவர் டாக்டர் க.சிவனடியான். என் கையெல்லாம் இரத்தம் என்ற சிறுகதைத் தொகுதியை 1993இல் வெளியிட்டவர். இவரது கதைகளில் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தொகுதியில் அஞ்சலிகளும் மரணிக்கின்றன, சந்தர்ப்பங்களின் முன் எல்லோரும் சமன், சிறகொடிக்கப்பட்ட பறவைகள் சேற்றில் வீழ்கின்றன, கற்பும் பயணிக்கிறது ஆகிய நான்கு சிறுகதைகளும், நெருப்பாற்றில் ஒரு நீலோற்பலம் என்ற குறுநாவலும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60740).

ஏனைய பதிவுகள்