அ.இரவி. சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், பழைய எண் 96, ஜெ.பிளாக், நல்வரவுத் தெரு, எம்.எம்.டீ.ஏ. காலனி, 1வது பதிப்பு, ஜுன் 2012. (சென்னை 600005: கணபதி பிராஸஸ்).
238 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 21×14 சமீ.
ஈழவிடுதலைப் பேபராட்ட காலப் பின்புலத்தில் எழுதப்பட்ட நாவல். ஆசிரியரின் அரசியல் பயணத்தின் அனுபவப் பகிர்வாக எழுந்த புனைவு. அருணாசலம் இரவி யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1960இல் பிறந்தவர். மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்று இலங்கையில் பத்தாண்டுகள் ஆசிரியப் பணியாற்றியபின் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். புதுசு, சரிநிகர், புலம், ஒரு பேப்பர் ஆகிய இதழ்களில் ஆசிரியர்குழுவில் பணியாற்றியவர். ஐ.பீ.சீ. தமிழ் வானொலி, ரி.ரி.என். தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர்.