ஆ.வேலுப்பிள்ளை (மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvii, 118 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-659-511-6.
பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் நூல்கள் 1966 இலிருந்து வெளிவருகின்றன. இவர்களது நூல்களில் இடம்பெறாமல்போன கட்டுரைகளைத் தொகுத்து கதம்பக் கட்டுரைகள் நூல் வெளிவந்துள்ளது. பன்முகப்பட்ட இவரது கட்டுரைகள் அனைத்தையும் இலக்கிய ஆய்வு, புலமையோர் பணி, அறிவியல் நோக்கு, மொழி ஆய்வு ஆகிய நான்கு இயல்களின்கீழ் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இலக்கிய ஆய்வு என்ற முதற்பிரிவில் திருமாலை, காரணம்-சமாதானம்-சாட்டு, சிறுகதை-மணிக்கொடிக் குழு, புறநானூற்றுக்காலம் பொற்காலமா? திருக்குறள் ஒரு கண்டன நூல், பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தின் தோற்றம் ஆகிய ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புலமையோர் பணி என்ற பிரிவில் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், அறிவு பரப்புவோனாக, ஆகிய இரண்டு கட்டுரைகளும், அறிவியல் நோக்கு என்ற பிரிவில் விஞ்ஞானமுறையில் கொள்கைகளின் தோற்றம், இலக்கியமும் இலக்கணமும் நேற்றும்-இன்றும்-நாளையும் ஆகிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொழி ஆய்வு என்ற நான்காவது பிரிவில் தமிழில் நிறப் பெயர்கள், இலங்கைப் பூர்வகுடிகளும் சிவ வழிபாடும், மிகப் பழைய இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் மூன்று- சில குறிப்புகள், இலங்கைத் தமிழ்ச் சாசன வழக்காறுகள், ஈழநாட்டுத் தமிழும் செட்டிநாட்டுத் தமிழும், மட்டக்களப்புத் தமிழும் மலையாளமும் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகப்பில் மொத்தம் 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.