திருக்குறள் மன்றம். கொழும்பு: திருக்குறள் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1955. (சென்னை 1: ஸ்ரீமகள் கம்பெனி).
222 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ.
திருக்குறள் தொடர்பாக ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் பதினான்கு தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. திருவள்ளவர் கண்ட தமிழகம் (ஒளவை சு.துரைசாமி), பெரியாரும் சிறியாரும் (அ.சதம்பரநாதச் செட்டியார்), மானம் (ச.சோமசுந்தர பாரதியார்), திருக்குறளும் சங்கநூல்களும் (க.அன்பழகன்), கள்ளும் சூதும் (செ.ரெ.இராமசாமிப் பிள்ளை), இருவேறு உலகத்து இயற்கை (சி.தேவி), ஒப்புரவு (ஞானம் இரத்தினம்), சான்றோன் யார்-அறிஞனா வீரனா? (மயிலை சீனி வேங்கடசாமி), பகைத்திறன் தெரிதல் (ஆ.கார்மேகக்கோன்), அரண் (கா.கோவிந்தன்), செம்பொருள் கண்டார் (உமை தாணு), நன்றியில் செல்வம் (அ.சே.சுந்தரராஜன்), வள்ளுவர் கண்ட நாடு (சுப.இராமநாதன்), சொல்வன்மை (ந.சேதுரகுநாதன்) ஆகிய 14 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 645).