11866 மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம் புத்தக நிலையம், இல.S.44, 3வது மாடி, CCSM Complex, இணை வெளியீடு, சென்னை 600 002: சவுத் ஏஷியன் புக்ஸ், 6/1, தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, ஜுலை 1994. (சென்னை 600 041: சூர்யா அச்சகம்).

110 பக்கம், விலை: இந்திய ரூபா 17., அளவு: 18×12 சமீ.

பாரதியின் சுதந்திரப் பாடல்கள் பாரதியின் காலத்துக்கு மட்டுமன்றி உலகில் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கும்வரை உயிர்த்துடிப்புடன் வாழவல்லவை என்பதையும் உலகில் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட எந்த ஒரு நாடோ, இனமோ, சமூகமோ, வர்க்கமோ, விடுதலை கோரி போராடத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்பதையும் நூலாசிரியர் அழுத்திக் கூறியுள்ளார். இந்நூல் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் இலகு நடையிலும் அமைந்துள்ளது. வீர சுதந்திரம் வேண்டி நின்றார்- பின்னர் வேறொன்று கொள்வாரோ, ஆயிரம் உண்டிங்கு ஜாதி, விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய், போராளிகளைப் பிடிக்கும் ஆவல் ஆகிய நான்கு பகுதிகளாக இந்நூல் தேர்ந்தெடுத்த பாரதியார் சுதந்திரப் பாடல்களையும் அவற்றுக்கான விளக்க உரைகளையும் தாங்கி வெளிவந்துள்ளது. 

ஏனைய பதிவுகள்

15819 மனைக்கு விளக்கு ஆயினள்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). vii, 128 பக்கம், விலை: ரூபா

15219 கொவிட்-19: மலையக சமுதாயத்தின் மீதான சமூக பொருளாதார விளைவுகள்.

எம்.கேசவராஜா (ஆசிரியர்), தை.தனராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: எம்.வாமதேவன், தலைவர், அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், 39, 36ஆவது ஒழுங்கை). iv, 44 பக்கம்,