11869 முத்தமிழ்.

கனகசபாபதி  நாகேஸ்வரன் (மூலம்), எஸ்.வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக் குழு, நல்லூர், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 137 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4745-01-8.

கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களின் மணிவிழாவையொட்டி வெளியிடப்பெற்றுள்ள இந்நூல், அவர் எழுதிப் பல்வேறு ஊடகங்களிலும், மலர்களிலும் பிரசுரமான 13 தமிழ் மொழி, இலக்கியக் கட்டுரைகளை உள்ளடக்கியது. சப்பிரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளரும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வழிவழி அறங்காவலருமான கலாநிதி க.நாகேஸ்வரன் அவர்கள் இந்நூலில் 13 கட்டுரைகளை எழுதியுள்ளார். இக்கட்டுரைகளில் பல புதிய தகவல்களும் விளக்கங்களும் காணப்படுகின்றன. முத்தமிழ், செம்மொழி தமிழ், தமிழ் எழுத்துக் கலையின் தோற்றமும் வளர்ச்சி வரலாறும்- ஒரு மொழியியலாய்வு, செந்தமிழின் ஒலிமரபு, பரிபாடல், திருக்குறள்: தமிழருக்காக மட்டும் எழுதப்படாத முதல் தமிழ் நூல், ஒப்பற்ற அற இலக்கியம் திருக்குறள், தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சிக் குமரன், அப்பர் தேவாரம், இதிகாசங்கள் கூறும் விழுமியச் சிந்தனைகள், சோழ மன்னனின் ஆட்சி, தமிழ்க் கல்வியில் மொழிப் பிரயோகம், ஈழத்திலக்கியமும் சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறையும் ஆகிய 13 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்