11881 பொருள்வெளி: ஆய்வுக் கட்டுரைகள்.

லறீனா அப்துல் ஹக். கெலி ஓய: லறீனா ஏ.ஹக், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xx, 195  பக்கம், விலை: ரூபா 250., அளவு: 19×14 சமீ., ISBN: 978-955-98241-6-9.

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரான லறீனா அப்துல் ஹக் ஈழத்துத் தமிழ்க் கவிதைத் துறையிலும் திறனாய்வுத் துறையிலும் காத்திரமான பங்களிப்பை நல்கும் ஒரு அறிவுஜீவி. இந்தத் தொகுப்பில், ஏழு தலைப்புகளின் கீழ் அவரது ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கலை இலக்கியங்களில் ‘பெண்’ பற்றிய புனைவு: சில குறிப்புகள், கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் பெண்ணின் விம்பம்: ஒரு பெண்ணியல் நோக்கு, ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு, கூண்டுப் பறவை பாடுவதேன் என நானறிவேன், போரும் கவிதையும்: மஞ்சுள வெடிவர்தனவின் மனிதத்தை நோக்கிய சகோதரத்துவக் குரல், கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சனைகளும்: சில அனுபவக் குறிப்புகள், மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு: சில குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் தன் ஆய்வை நிகழ்த்தி இருக்கிறார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 192955). 

ஏனைய பதிவுகள்