செ.நடராசா. யாழ்ப்பாணம்: திருமதி ஆனந்தி சிவஞானசுந்தரம், ஆனந்தி, அளவெட்டி வடக்கு, அளவெட்டி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், காங்கேசன்துறை வீதி, இணுவில்).
(6), 104 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 19×13 சமீ.
சுன்னாகம் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி ஆனந்தி சிவஞானசுந்தரம் பதிப்பித்துள்ள இந்நூல் 80 வயதைத் தாண்டிய மூதறிஞர் செ.நடராஜா அவர்களின் நகைச்சுவை ததும்பும் கட்டுரைகளைக் கொண்டது. இந்நூல் ஆசிரியரின் அனுபவ முதிர்ச்சியால் ஏற்பட்ட பொறுப்பான சமூகப் பார்வையின் வெளிப்பாடாக இதிலுள்ள கட்டுரைகள் அமைவதைக் காணமுடிகின்றது. நமது சமூகத்தின் பலத்தையும் பலவீனத்தையும், குறை-நிறைகளையும் தனது எழுத்தில் கொண்டுவரும்போது பொறுப்புணர்வுடனும் கரிசனையுடனும் அவற்றை நகைச்சுவை உணர்வுடன் சித்திரித்துள்ளார். பிள்ளையார் பிடிக்க, மங்கையர்க்கு ஆடவரின் மீசைமீது ஆசை ஏனோ?, பெண்ணின் ஆசைகளால் பரிதவிக்கும் புருஷர்கள், மனைவியின் மதிப்பு குறைகிறது, யமதர்மராஜா றாகிங் பயிற்சி பெற்றாராம், அழகு மனைவியர் ஸ்ரைக் என இன்னோரன்ன 26 நகைச்சுவைக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36090).