11899 மணிபல்லவம்.

அ.மு.பரமசிவானந்தம். சென்னை 30: தமிழ்க் கலை இல்லம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1958. (தமிழ்நாடு: முத்தமிழ் அச்சகம், காஞ்சீபுரம்).

96 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 17.5×12 சமீ.

1957 கோடை விடுமுறையில் தமிழகத்தைச் சேர்ந்த அ.மு.பரமசிவானந்தம் என்னும் பெரியார் ஒரு வாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவ்வேளை  நயினாதீவுக்கும் (மணிபல்லவம்) ஒரு நாள் சென்றிருந்தார். அவரது நயினாதீவு உள்ளிட்ட யாழ்ப்பாணப் பயணக் கட்டுரையே இந்நூலின் முதற் பகுதியாகும். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை கல்லூரி விழாவொன்றில் அவர் பேசிய கம்பராமாயணத்தை ஒட்டிய ‘மங்கையர் இருவர்’ என்ற சொற்பொழிவு இரண்டாம் பகுதியாக இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1315).

ஏனைய பதிவுகள்