11902 சந்தானாசாரியர் புராண வசனம்.

க.பொன்னம்பல உபாத்தியாயர். யாழ்ப்பாணம்: க.பொன்னம்பல உபாத்தியாயர், கரவெட்டி கிழக்கு, 1வது பதிப்பு, ஆவணி 1912. (யாழ்ப்பாணம்; விவேகாநந்த யந்திரசாலை).

(6), 27 பக்கம், விலை: 25 சதம், அளவு: 20×13 சமீ.

சமய குரவருக்குப் பின்னர் தோன்றியவர்களுள் சைவசித்தாந்த சாத்திரங்களைத் தமிழில் இயற்றியதுடன் அவற்றைத் தமது நன்மாணாக்கர்களுக்குப் போதித்தும் தமிழ்நாட்டில் சைவசித்தாந்தம் தழைத்தோங்கச் செய்தவர்களான மெய்கண்ட சிவாச்சாரிய சுவாமிகள், அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள், மறைஞானசம்பந்த சிவாச்சாரிய சுவாமிகள், உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் வழங்குகின்றது. க.பொன்னம்பல உபாத்தியாயர், ஸ்ரீமத் வ.குமாரசுவாமிப் புலவரின் மாணாக்கராவார்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2926).

ஏனைய பதிவுகள்