11907 பிரஹ்மஸ்ரீ ஷெய்கு நெய்னா முஹம்மது (தாளையான் சுவாமி) ஞானதேசிகர் அவர்களது சரித்திரம்.

சி.அருணாசலம். கொழும்பு 12: சி.அருணாசலம், தாளையான் ஆத்மார்த்த அந்தரங்கக் கூட்டத்தவர், 115 மெஸஞ்சர் வீதி, 2வது பதிப்பு, 1990, 1வது பதிப்பு, 1963.(கொழும்பு 12: தாளையான் அச்சகம், 115 மெஸெஞ்சர் வீதி).

96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தென் இந்தியாவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘நம்புதாளை’ என்ற ஊரில் பிரஹ்மஸ்ரீ செய்குநெய்னா முஹம்மது (தாளையான் சுவாமி) அவதரித்தார். 12 ஆண்டுகள் முத்துப்பேட்டையில் நிஷ்காமிய தவமியற்றிய பின்னர் கொழும்புக்கு வந்து இங்கே நிரந்தரமாகக் குடியேறினார். அவரை ‘கொழும்பாண்டவர்கள்’ என்று இன மத பேதம் கடந்து மக்கள் ஆன்மீக வழியில் பின்பற்றினார்கள். அடியார்கள் சமயம் கடந்த ‘மோன சமரஸம்’ எத்தகையதென்ற அனுபூதிவாய்க்கப் பெற்றார்கள். கொழும்பில் சாதுக்களும் பக்கீர்களும் வாழ்வதற்கென ‘தாளையான் அச்சகத்தை’ சுவாமிகள் உருவாக்கினார். அவர் 1955 ஓகஸ்ட் 3ம் திகதி கொழும்பிலேயே மகாசமாதியை அடைந்தார்கள். இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகாமையில் கந்தவளை என்னும் பூங்காவில் வணக்கத்துக்குரிய அவரது சமாதி உள்ளது. இந்நூல் தாளையான் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12954).

ஏனைய பதிவுகள்

Mi Online casinos 2024

Articles Play’n Go: essential link Online Ports Trial More about A real income Casinos on the internet Inside Asia For every remark, i browse the