11919 ஆவணஞானி அமரர் குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் நினைவுப் பகிர்வு.

புஷ்பா கனகரட்ணம் (தொகுப்பாசிரியர்). Ontario M1H3B7: Dr. Pushpa Kanagaratnam, Ph.D., C. Psych., Clinical Psychologist, Psychological Recovery Clinic, 2100 Ellesmere Rd, Suite 334, Scarborough, 1வது பதிப்பு, 2017. (கனடா: சில்வர் பிறின்ற் ஹவுஸ், மிசிசாகா, ஒன்றாரியோ மாகாணம்).

146 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

ஆவணஞானி அமரர் குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் (01.08.1935-22.06.2016) அவர்களின் ஓராண்டு நினைவுதின நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற மலர். குடும்பத்தினரின் நினைவுரைகளையடுத்து, சங்கொலி அருணகிரியின் நேர்காணலுடன் தொடங்கும் இந்நூலின்  நினைவுப் பதிகைகளை மார்க்கண்டன் ரூபவதனன், சுந்தரம் திவகலாலா, மா.க.ஈழவேந்தன், எஸ்.கஜானி, வி.கந்தவனம், தம்பித்துரை மங்களேஸ்வரி, மு.க.சு.சிவகுமாரன், குரும்பசிட்டி அசோகன், என். செல்வராஜா, சச்சி ஸ்ரீகாந்தா, கோபிநாத் ஜெயச்சந்திரன், குரும்பசிட்டி ஐங்கரன், வேல். வேலுப்பிள்ளை, வாணி சிவராஜன், வீணை மைந்தன், ந.பார்த்திபன், ரவிநந்தா, சொ.சந்திரசேகரன், வசந்தி ஆகியோர் பதிவுசெய்துள்ளனர். ஈழத் தமிழரின் நூற்றாண்டுக்கால வரலாற்றை, அதற்கான வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் ஒரு புனிதப் பணியினை, தனியொருவராக நின்று கடந்த 45 வருடங்களாக இவர் எம்மினத்துக்காகச் செய்துவந்துள்ளார். அமரர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்தின் தேடல் பணி 1956முதல் பலத்த சிரமத்தின் மத்தியில் தொடங்கியது. 1958, 1977, 1983 ஆகிய காலகட்டங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளின் காரணமாக அவரது சேகரிப்புகள் பாரிய அச்சுறுத்தல்களை கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்கொண்டன. ஈற்றில் அவற்றை பலத்த சிரமத்தின் மத்தியில் வடபகுதிக்குக் கொண்டுவந்து, குரும்பசிட்டியில் இருந்த அவரது இல்லத்தில் வைத்துப் பாதுகாத்ததுடன், அங்கிருந்தபடியே தன் தேடல்களையும் ஆவணப்பதிவுகளை தேடித்தேடிச் சேகரித்தார். இந்திய இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்திருந்த வேளையிலும் அவருக்கு இவ்வாவணங்களால் சிக்கல்கள் ஏற்பட்டன. எந்தவொரு நிறுவன உதவியுமின்றி தனிமனித முயற்சியாக வேலை செய்யும்போது, பாரிய சந்தேகங்கள் பாதுகாப்புத் தரப்பில் ஏற்படுவதில் வியப்பேதும் இருக்கவில்லை. ஒரு தனிமனிதனாக வெற்றிகரமாக அவற்றைச் சமாளித்தவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள்.

ஏனைய பதிவுகள்