பா.பாலசூரியன். சென்னை: தோழர் விசுவானந்ததேவன் நினைவுநூல் வெளியீட்டுக்குழு, ஆய்வகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சென்னை 600005: கணபதி எண்டர்பிரைஸ்).
xii, 290 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ.
1983 ஜுலை இன வன்செயலுக்குப் பின்னர் தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பெரும்பாலான இயக்கங்கள் பிளவுகளைச் சந்தித்திருந்தன. அவ்வகையில் தோழர் விஸ்வானந்ததேவன் இணைந்திருந்த தமிழீழ தேசிய விடுதலை முன்னணியும் (NLFT) இரண்டாக உடைந்து, அவரது தலைமையில் 1986இல் தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) உருவாகியது. வடமராட்சி கரணவாய் மேற்கில் கல்லுவம் என்ற கிராமத்தில் 29.11.1952இல் பிறந்தவர் விஸ்வலிங்கம் விசுவானந்ததேவன். 1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் வளாகத்தில் பட்டம்பெற்று 1975இல் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளராகப் பணியாற்றியவர். சில காலங்களில் தொழில்வாய்ப்பினைப் புறக்கணித்து, இளவயதிலேயே மார்க்சிய அரசியலில் முழுநேரமாக ஈடுபட்டவர். ஒக்டோபர் 1986இல் தமிழகத்தை நாடிய படகுப் பயணத்தின் போது கொல்லப்பட்டவர். இந்நூல் தோழர் விசுவானந்ததேவன் பற்றி அவரை அறிந்த 25 அரசியல் பிரமுகர்களின் கட்டுரைகளை உள்ளடக்குகின்றது. இக்கட்டுரைகளினூடாக சமகால அரசியலும், தோழர் விஸ்வாவின் வாழ்வும் பணிகளும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தோழர் விஸ்வானந்ததேவனால் எழுதப்பட்ட சில அரசியல் கட்டுரைகளையும் இந்நூல் உள்ளடக்குகின்றது.