விதானையார் (கஜன்). பிரான்ஸ்: மீடியா சென்டர், BP 18, 93701, Drancy Cedex 1வது பதிப்பு, நவம்பர் 2016. (பாரிஸ்: Imprimerie RAS).
286 பக்கம், புகைப்படங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண் 10., அளவு: 22×15.5 சமீ.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் குறித்த ஒரு வரலாற்றுப் பதிவான இந்நூலின் பிரதான கட்டுரை முன்னாள போராளியின் நினைவுப் பதிவாக ஈழமுரசு (பாரிஸ்) பத்திரிகையில் வெளிவந்த வரலாற்றுத் தொடராகும். முன்னாள் போராளியான விதானையார் (கஜன்) வழங்கிய அனுபவக் குறிப்புகளை வைத்து, சுவையான தொடராக்கியவர் ஈழமுரசு பொறுப்பாசிரியரான ஜெய்சந்தர் அவர்கள். இந்நூல் அமரர் பால்ராஜின் பிறந்த தினமும் மாவீரர் தினமுமாகிய 27.11.2016 அன்று பாரிசில் வெளியிடப்பட்டது. இந்நூலில் வே.பிரபாகரன், பொன். தியாகம், விதானையார், பரமு மூர்த்தி, வ.கௌதமன், பழ.நெடுமாறன், கவிஞர் காசி. ஆனந்தன், கி.ஜெய்சந்தர் ஆகியோரினால் எழுதப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய முன்னுரைக் குறிப்புகளும், இவற்றைத் தொடர்ந்து பிரதான கட்டுரைத் தொடரும், தொடர்ந்து வரும் பின்னிணைப்புகளாக பிரிகேடியர் தீபன் (மாவீரன் பால்ராஜ்), ச.பொட்டு (விடுதலை வரலாற்றில் மூடப்படாத சரித்திரம்), கேணல் சூசை (மரபுவழி இராணுவமாக உலகைப் பார்க்கவைத்த பால்ராஜ்), யோ.செ.யோகி (பிரிகேடியர் பால்ராஜ் வீரத்தின் குறியீடு) ஆகியோரின் சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.