உ.நவரட்ணம், கி.புண்ணியமூர்த்தி, பீ.இராமதாஸ், தெ.மதுசூதனன் (மலர்க் குழு). கொழும்பு: பேராசிரியர் மா.கருணாநிதி பாராட்டு விழாக் குழு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xliv, 384 பக்கம், அட்டவணைகள், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களின் கல்வித்துறைக்கான சேவையைக் கௌரவிக்கும் வகையில் அவரது நண்பர்கள், மாணவர்களால் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துச் செய்திகள், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து ஈழத்தின் பிரபல கல்வியியலாளர்களால் எழுதப்பட்ட கலவித்துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான 43 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் மா. கருணாநிதி கொழும்புப்; பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அதே பீடத்தினைச் சேர்ந்த தேசியக் கல்வி ஆராய்ச்சி மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளராகவும் விளங்குகின்றார். முகாமைத்துவக் கொள்கை ஓர் அறிமுகம் (இணை ஆசிரியர்), கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள் ஆகிய நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘கல்விச் சமூகவியல்’ எனும் நூல் தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.