11943 பி.ஏ.கிருஷ்ணன்: வாழ்வும் எழுத்தும்.

விம்பம் அமைப்பு. லண்டன் E6 2BH: விம்பம், 4 Burges Road, இணை வெளியீடு, லண்டன்: தமிழ் மரபு அறக்கட்டளை, 1வது பதிப்பு, மே 2012. (லண்டன், அச்சக விபரம் தரப்படவில்லை).

68 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 15×21 சமீ.

நாவலாசிரியர் பீ.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு மாலைப் பொழுது என்ற இலக்கிய நிகழ்வு 27.5.2012 அன்று லண்டன், வெம்பிளியில் சங்கமம் உணவு விடுதியில் நடைபெற்றவேளை வெளியிடப்பட்ட சிறப்பிதழ். இம்மலரில் பல்வேறு ஏடுகளிலும் வெளியான பீ.ஏ.கிருஷ்ணனின்  படைப்புகள் பற்றிய விமர்சனங்கள், நேர்காணல்களைத் தொகுத்து வழங்கியிருக்கின்றனர். இந்தியப் படைப்பாளியான பீ.ஏ.கிருஷ்ணன் புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகிய இரண்டு நாவல்களையும் அக்கிரஹாரத்தில் பெரியார், திரும்பிச் சென்ற தருணம், என்னும் கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதும் மிகச்சில இந்திய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.  புதுடெல்லியை இருப்பிடமாகக்கொண்ட பீ.ஏ.கிருஷ்ணன், ஆசிரியராகவும் அரச அதிகாரியாகவும் பணியாற்றியவர். சமகால இலக்கிய உலகில் மிகவும் கவனிக்கப்படும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

ஏனைய பதிவுகள்

Cellular Casinos United kingdom

Blogs How can i Put And you will Withdraw Money from An online Gambling enterprise? Greatest Cellular Casino Application Developers State Playing We’ve detailed a