11947 மனசோடு பழகும் மல்லிகை ஜீவா.

தெணியான். கொழும்பு: Happy Digital Centre, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

104 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×15 சமீ., ISBN: 978-955-7528-00-7.

தெணியானின் 88ஆவது பிறந்த தினம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்தபோது வெளியிடப்பட்ட நூல். தெணியான் தினக்குரலில் 22 வாரங்களாக எழுதிய தொடரின் நூலுரு இதுவாகும். ஜீவாவுடனான சந்திப்பு, நான் மல்லிகைக்கு எழுதிய சிறுகதை, ஜீவாவின் பலம், என் திருமணத்தில் கலந்துகொண்ட ஜீவா, இலக்கிய உறவுகளைப் பேணிய ஜீவா, எனது முதல் நூல் வெளியீட்டில் ஜீவா, ஜீவா-ஜெயகாந்தன் நட்பு, மல்லிகையில் வெளியான விவாதக் கட்டுரைகள், எழுத்தாளர்களின் இணைப்புப் பாலமாக இருந்தவர் ஜீவா, ஓயாத உழைப்பும் பெருந்தன்மையும் மிக்கவர் ஜீவா, இறக்குமதியாகும் தரமற்ற சஞ்சிகைகளைத் தடைசெய்யப் பாடுபட்ட ஜீவா, யாழ். சமூகத்தின் வாழ்வியலை முழுமையாக அறிந்தவர் ஜீவா, எதையும் சிந்தித்துத் திட்டமிட்டு செயற்படுத்துபவர் ஜீவா, இலங்கையின் இலக்கிய வரலாற்றில் தனக்கென்றொரு இடம்பிடித்த ஜீவா, தன்னை அவமதித்தவர்களையும் மல்லிகையில் கௌரவித்த ஜீவா, சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கும் திறமையுள்ள ஜீவா, போரால் இடம்பெயர்ந்தாலும் தளராது உழைத்தவர் ஜீவா, இலக்கியவாதிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்த ஜீவாவின் மல்லிகை, இலக்கியம் மட்டுமல்லாது உறவுகளுக்கும் மதிப்பளிக்கும் ஜீவா, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகத் தனது பிறந்தநாளைப் பயன்படுத்தும் படைப்பாளி, தனது நட்புக்குரியவர்கள் மீது அதீத அக்கறை செலுத்தபவர் ஜீவா, ஈழத்து இலக்கிய நாயகன் டொமினிக் ஜீவாவை கௌரவிக்க வேண்டியது எல்லாருடைய கடமையுமாகும் என 22 அத்தியாயங்களில் வெளிவந்துள்ள இந்நூல் இலங்கையின் தமிழ் இலக்கிய ஆளுமையொன்றைப் பற்றிய மற்றொரு இலக்கியவாதியின் அனுபவப் பகிர்வாக அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Bestbook Of Ra Online Casinos

Content Cum Joci Book Of Ra Classic: you can check here Report A Problem With Cash Connection: Book Of Ra According to the number of