எம்.ஐ.எம். முஹியத்தீன் (ஆங்கில மூலம்), வசந்தி தயாபரன் (தமிழாக்கம்). கொழும்பு 6: சித்தி லெப்பை ஆய்வு மன்றம், 414, காலி வீதி, 1வது பதிப்பு, மே 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
46 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-7436-00-5.
அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் முன்னாள் இணைச் செயலாளரும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகச் செயலாளருமான நூலாசிரியரின் ஆங்கில உரையின்; மொழிபெயர்ப்பு. 2500 வருடகால வரலாறு கொண்ட இலங்கை முஸ்லிம்களை அங்கீகரிக்கப்பட்ட தேசிய இனமாக நிறுவும் ஆசிரியர் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பிலும் அதிகாரப் பகிர்விலும் முஸ்லிம்களின் கோரிக்கை என்னவென்பதை முன்வைக்கிறார். இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் இன முரண்பாட்டின் பின்னணி, இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு (ஜுலை 1987) முன்னரான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையிலான முரண்பாடு, இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் (ஜுலை 1987) பின்னரான வடக்கு கிழக்கில்; தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையிலான இன முரண்பாடு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, டிசம்பர் 1987இல் வடக்கிலும் கிழக்கிலுமான முஸ்லிம் அகதிகள், வடக்கு கிழக்கு முஸ்லிம்களும் ஜுலை 1987 இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையும், பரவலாக்கல் முன்மொழிவுகளும் வட-கிழக்குப் பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களுக்கான தனியான அதிகாரப் பகிர்வு அலகிற்கான கோரிக்கையும், இலங்கையின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு அலகு, பாண்டிச்சேரி இந்தியாவின் நிலத்தொடர்பற்ற ஒரு மாநிலம் ஆகிய 10 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62104).