எம்.ஆர்.ஸ்டாலின். கொழும்பு 12: உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம், Centre for Dialogue and Research, 141 C, 1/1, பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
56 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ.
ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கினரின் ஏற்பாட்டில் 11-12.11.2006ஆம் திகதிகளில் இலங்கையின் பல கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த அரசியல் மாநாட்டில் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி சார்பில் எம்.ஆர். ஸ்ராலின் அவர்களால் கிழக்கின் சுயநிர்ணயம் என்னும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையின் நூல்வடிவம் இது. கிழக்கின் சுயநிர்ணயம், கிழக்கின் புராதன வரலாறு, காலனித்துவத்தின் வருகை, மாகாண அமைப்பு முறையின் தோற்றம், முக்குவர் மற்றும் ஷரீஆ சட்டக்கோவைகள், அந்நிய ஆட்சியின் விளைவான யாழ்ப்பாணத்தின் வளர்ச்சி, சர்வசன வாக்குரிமை: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு, இனவாத அரசியல், இலவசக் கல்வித்திட்ட மசோதா எதிர்ப்பு, நல்லையாவை ஒதுக்கிய யாழ்ப்பாணத்துத் தலைவர்களின் சதி, மலையக மக்களைக் காட்டிக் கொடுத்த யாழ்ப்பாணத் தலைமைகள், தமிழரசுக் கட்சி, சுயபாஷை இயக்கம், சா.ஜே.வே.செல்வநாயகம் புதிய மொந்தையில் பழைய கள்ளு, கல்வி தரப்படுத்தல்: யாழ் மேட்டுக் குடிகளின் பிரச்சினை, வட்டுக்கோட்டை, இராஜதுரைக்கு இழைக்கப்பட்ட சதியும் துரோகமும், கிழக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம், எதிர்மறை ஒற்றுமையில் உள்வாங்கப்பட்ட கிழக்கு மாகாணம், கிழக்கின் விலைகொடுப்பு, புலிகளின் கிழக்குப் பிளவும் 13ஆவது நாடாளுமன்றத் தேர்தலும், முடிவாக ஆகிய 22 இயல்களில் இந்நூல் கிழக்கிலங்கையின் சுயநிர்ணய உரிமை பற்றிய தன் நியாயங்களை முன்வைக்கின்றது.