நந்தன் (நேர்கண்டவர்). கொழும்பு: சி.அ.யோதிலிங்கம், 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
68 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15 சமீ.
அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கத்துடன் லண்டன் தமிழ் உலா வானொலிச் சேவைக்காக ஊடகவியலாளர் நந்தன் அவர்கள் மேற்கொண்ட நேர்காணலின் எழுத்து வடிவம் இது. (முதலமைச்சர்) சி.வி.விக்கினேஸ்வரனின் முல்லைத்தீவு விஜயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம், இந்தியத் தேர்தல் முடிவுகள், இந்தியப் பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவம், ஜெனீவாவும் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானமும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனின் யாழ்ப்பாண விஜயம், உள்ளுராட்சிச் சபைகளின் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுதல், மாற்று அரசியல் இயக்கமே இன்றைய தேவை, சிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகிய விடயங்கள் இந்த நேர்காணலின் மூலம் ஆராயப்பட்டுள்ளன. சி.அ.யோதிலிங்கம், யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை பட்டதாரி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர்.