11961 முஸ்லிம் அரசியலின் இயலாமை.

எம்.எம்.எம். நூறுல்ஹக். சாய்ந்தமருது 5: மருதம் கலை இலக்கிய வட்டம், 129B, ஒஸ்மான் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (கல்முனை: அன்-நூர் பிரின்டர்ஸ்).

(19), 102 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43179-0-1.

பதினேழு வயதில் (1981)இல் எழுத்துப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட எம்.எம்.எம். நூறுல்ஹக், ஹாதிபுல் ஹூதா (நேரிய எழுத்தாளர்) என்ற பட்டத்தினைப் பெற்றவர். மேலும் 2012இல் கிழக்கு மாகாண சபையின் சாஹித்திய விருதை விமர்சனத்துறைக்கும் தன் எழுத்துப் பணிக்கும் பெற்றவர். இந்நூலில் இவரது 14 இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான அரசியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமகால இலங்கை முஸ்லிம்களினின் அரசியல் பற்றியும் அது எதிர்நோக்கும் பல்வேறு  பிரச்சினைகள், சவால்கள் பற்றியும் ஆய்வுக்குட்படுத்தி  பொருத்தமான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் முன்வைக்கின்றன. முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் அல்லர், தெளிவான இனத்துவ வரையறைக்குள் இலங்கை முஸ்லிம்கள், எப்படியும் பெறவேண்டிய முஸ்லிம் மாகாணம், தேசிய மாநாடு என்பது கொடிகளால் ஆகக்கூடாது கொள்கைகளால் ஆகவேண்டும், இலங்கையர் என்ற அடையாளத்திற்கு இனக் குழுமத்துவம் ஒரு தடையா? வடக்கு கிழக்கு இணைப்பு தொடங்கும் மற்றொரு பிணக்கு, கல்முனை கரையோர மாவட்டம் இலங்கையின் நிர்வாகத்திற்கு உட்பட்டதே, வடக்கு முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றம் ஒர் இனச்சுத்திகரிப்பே, முஸ்லிம் தனியார் சட்டம் இஸ்லாத்துக்குப் புறம்பானதா? முஸ்லிம் அரசியலின் இயலாமை, இலங்கையின் ஆட்சித்துறையில் அமைச்சரவையின் வகிபாகம் என்ன? நாடாளுமன்றப் பணிகளை மறந்து நாணயத்தின் மீது சவாரி செய்யும் நமது பிரதிநிதிகள், தேசியப் பட்டியல்: சட்ட ஒழுங்கும் சாதிக்கும் தலைமைகளும், வடக்கு கிழக்கு தொடரும் ஆளுநர் முரண்பாடுகளும் முடியாமல் தடுமாறும் முதலமைச்சர்களும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்