முருகேசு சந்திரகுமார். கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2015. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை).
x, 293 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ.
திரு.கித்துல்கொட, ராஜன் ஆகியோர் பற்றிய நினைவுரைகள், தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வு, பொறுப்புக் கூறும் கண்ணியத்துடன் செயற்படவேண்டும், இந்திய மீனவர்களின் அத்துமீறல், லஞ்ச ஊழல் ஆணைக்குழு சீரமைக்கபடவேண்டும், வடபகுதி விவசாயிகளின் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு, வடக்கின் ஆசிரியர்வளப் பங்கீடு, எனப் பல்வேறு கருத்துக்கள் இலங்கைப் பாராளுமன்றில் 45 பாராளுமன்ற உரைகள் வழியாக 2012-2015 காலகட்டங்களில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் மு.சந்திரகுமார் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்தப் பாராளுமன்ற உரைகள் அனைத்தும் திகதி வாரியாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.