முருகேசு சந்திரகுமார். கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, மே 2015. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை)
x, 116 பக்கம், வண்ணத் தகடு, விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.
வடக்கு மீதான பொருளாதாரத் தடை நீக்கம், உயர்கல்வி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அதிகளவு பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு வடகிழக்கின் அழிவுகளை அதிகரிக்கும், பாதுகாப்புத்துறையினர் அனைத்துத் தமிழர்களையும் சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் நிலை, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பறிக்கும் செயல் தவறு, தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், வடக்கு-கிழக்கு கல்வித் துறையின் ஆளணிப் பற்றாக்குறை, வடக்கில் சிவில் அதிகாரிகளாக இராணுவத்தினரை நியமிப்பது சிவில் நிர்வாகத்தையே சிதைக்கும் செயல், வடக்கு கிழக்கு கல்வியில் விசேட கவனம் தேவை, வடக்கு கிழக்கின் புனர் நிர்மாண புனர்வாழ்வில் அதிக கவனம் தேவை, செம்மணிப் புதைகுழிகள் பற்றிய சர்வதேச அமைப்புகளின் அறிக்கை அரசினால் அலட்சியம் செய்யப்படுகின்றது, தமிழர்களின் தாயக பூமியில் திருக்கோணமலை பறிபோகும்; நிலை, தமிழ்ப் பத்திரிகையாளர்களை காரணமின்றிக் கைதுசெய்வதும் தடுத்துவைப்பதும் நிறுத்தப்படவேண்டும் எனப் பல்வேறு கருத்துக்கள் இலங்கைப் பாராளுமன்றில் 13 பாராளுமன்ற உரைகள் வழியாக 1995-1998 காலகட்டங்களில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் மு.சந்திரகுமார் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்தப் பாராளுமன்ற உரைகள் அனைத்தும் திகதி வாரியாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.