முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை 3: எம்.எம்.மிஹ்லார், ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (மருதமுனை: அப்னா பிறின்டர்ஸ்).
xiii, 85 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-42405-0-6.
முஸ்லிம்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், குடியேற்றம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் எந்நிலையில் உள்ளார்கள் என்பதையும் முஸ்லிம்களின் வாழ்வாதார நிலைகளைத் தாழ்த்துவதற்காக எந்தளவு திட்டமிடப்பட்ட சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் இந்த இக்கட்டிலிருந்து முஸ்லிம்கள் மீள்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகின்றது. முஸ்லீம்களால் எதிர்கொள்ளப்படும் சவால்களின் வரலாற்றுப் பின்னணி, சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள், விழிப்படைய வேண்டிய முஸ்லீம்கள், முஸ்லீம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்குதல்களும் தாக்குதல்களும், முஸ்லீம்களின் கலாசார விடயங்கள், முஸ்லிம்களின் வாழ்விடப் பிரச்சினைகள், முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள், பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள், முஸ்லிம்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மதச்சார்புப் பிரச்சினைகள், முஸ்லிம்களின் சமூகப் பிரச்சினைகள், முஸ்லிம் முகவர்களின் செயற்பாடுகள், பொழுதுபோக்கு சாதனங்களை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்துதல், முஸ்லிம்கள் சமூக நலன்களில் அக்கறையுற்றிருத்தல், சமூகம் சார்ந்த ஏனைய பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கென்றொரு ஆள்புல பிரதேசம், பிரதிநிதிகள் தெரிவில் முஸ்லிம்களின் பங்களிப்பு, காணாமல் போனோர் பற்றிய விடயங்கள், எதிர்காலத்தில் செய்யவேண்டிய நடவடிக்கைகள் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.