11973 வெளிநாடுகளில் தமிழர்.

சிவலிங்கம் சதீஷ்குமார். கொழும்பு 10: சி.சதீஷ்குமார், 175/33/L/2, சென்ட்ரல் மௌலானா கார்டன், மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 217 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-42116-3-6.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் தமிழர்கள், தமிழர்களின் வெளிநாட்டுக் குடியேற்றங்கள் ஆகிய முதல் மூன்று அத்தியாயங்களின் பின்னர் ஆசிரியர் மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், தென்னாபிரிக்கா, பிஜி, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கரீபியன் தீவுகள், கயானா ஜமெய்க்கா, கிரெனடா, ரீயூனியன், சீசெல்சு, ஜப்பான், சீனா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, இத்தாலி, ஹாலந்து, சுவீடன், டென்மார்க், சோவியத் ஒன்றியம், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் வாழும் தமிழர்கள் பற்றித் தனித்தனி இயல்களில்  விபரித்திருக்கிறார். மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பான்மையாக வாழும் இந்தியர், வளைகுடாவில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பன இறுதி இரு இயல்களில் விபரிக்கப்பட்டுள்ளன. சதீஸ்குமாரின் இந்நூல் தூர நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்வியல் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றது. தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்வியல், வெளிநாட்டுத் தமிழர்களின் வாழ்வியல், அவர்கள் தமது தனித்துவத்திற்கென மேற்கொள்கின்ற முயற்சிகள், தான் குடியேறிய நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனத்தவரோடு சுமுகமாக வாழ்வதற்கு பயன்படுத்துகின்ற உபாயங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் பற்றிய அறிவினை இந்நூல் சுவைபட வழங்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Topul cazinourilor online

Content Software conj cazinou – Care sunt cei apăsător populari furnizori de soft între România? Articole din Îndrumar Casino Las Vegas Casino Cazinouri online conj