11982 நயினை மான்மியம்.

நயினை வரகவி நாகமணிப் புலவர் (மூலம்), ப.க.மகாதேவா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ப.க.பரமலிங்கம், 31, அருத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, வைகாசி 2005. (கொழும்பு 6: கிரிப்ஸ்).

213 பக்கம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ.

வெளியீட்டுரை, அணிந்துரை, வாழ்த்துரை ஆகியவற்றைத் தொடர்ந்து நயினாதீவு இடப்பெயர் ஆய்வு, நூலாசிரியர் வரலாறு, புலவரைப் பற்றிய ஒரு நோக்கு, நயினை மான்மியம் (பாயிரம், ஈழமண்டலச் சருக்கம், ஸ்தல விசேடச் சருக்கம், மூர்த்தி விசேடச் சருக்கம்,  தீர்த்த விசேடச் சருக்கம்,  சேடனருச்சனைச் சருக்கம்,  விழாவணிச் சருக்கம்,  உவ வனச் சருக்கம்,  மகாமணிச் சருக்கம்,  புண்ணியராச தரிசனைச் சருக்கம்), நயினை நிரோட்ட யமக அந்தாதி, புலவர் தன் பதின்மூன்றாவது வயதில் பாடிய பாடல், வழிநடைச் சிந்து, தனிப்பாடல்கள், நயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல் ஆகிய விடயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நயினை வரகவி நாகமணிப் புலவர் நினைவாக வைகாசித் திங்கள்2005ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36733).

ஏனைய பதிவுகள்

17311 வசந்தன்கூத்து.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600014: பிரின்ட் பிராசஸ்). xxx, 126 பக்கம், விலை: