க.கெஜரெத்தினம் (புனைபெயர்: பெரியையா). திருக்கோணமலை: நிலா வெளியீடு, கஸ்கசன் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்).
xx, 60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.
திருக்கோணமலை மாவட்டத்தின் நிலாவெளி கிராமம் பற்றிய பிரதேச வரலாற்று நூல். கிராமத்தின் தோற்றம், நிலாவெளி கிராமத்தின் பழங்காலப் பெயர்களும் இடங்களும் வாழ்ந்த மக்களும், மக்களின் வாழ்வாதாரமான தொழில்களும் தொழில்முறைகளும், போக்குவரத்து, பாடசாலைகளும் கல்வி நிலையும், நிலாவெளி வரலாற்றில் பண்டைய அரச நிர்வாகம், சமய வழிபாட்டுத் தலங்களும் முற்கால வழிபாட்டு முறைகளும், திருக்கோணேஸ்வர மகோற்சவம்-கட்டுக்குளப் பற்று அன்பர்களின் 10ம்நாள் திருவிழா பற்றிய வரலாறு ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55229).