எஸ்.ஏ.மிராண்டா. பேசாலை: பாத்திமா கழகம், சென் திரேசா வீதி, 8ஆம் வட்டாரம், 1வது பதிப்பு, ஜுன் 2006. (கொழும்பு 14: டிறான்சென்ட் பிரின்டர்ஸ்).
xxii, 302 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 955-1475-00-3.
மன்னார் தீவின் மேற்கே அமைந்துள்ள பேசாலை கிராமத்தின் விரிவான பிரதேச வரலாறு இந்நூலில் வரலாறு, தொன்மைச் சிறப்பு, மறையாட்சி, தொழில், கல்வி, கலை, கலாசார அபிவிருத்திகள் ஆகிய நான்கு பிரிவுகளாக வகுத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வரலாறு என்ற முதலாவது பிரிவில் மூதாதையர் வரலாறு, கடல்கடந்தார் நாடடைந்தனர், மதமாற்றமும் சங்கிலியன் சீற்றமும், ஒல்லாந்தர் ஆட்சியும் போர்த்துக்கேயர் வீழ்ச்சியும், ஒல்லாந்தர் ஆட்சியின் அஸ்தமனமும் ஆங்கிலேயர் ஆட்சியின் உதயமும் ஆகிய விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொன்மைச் சிறப்பு என்ற இரண்டாம் பிரிவில் மூவரசர் பட்டணம், வெற்றியன்னை ஆலய ஆரம்பத் தோற்றமும் காலத்தில் ஏற்பட்ட மாற்றமும், நீங்காத நினைவுகள், சிங்காசனம், சேமக்காலை, மூவரசர் ஆலயம், பிரசங்க மேடை, திருச்சொரூபங்கள், திருச்சிலுவைப் பாதை ஸ்தலங்கள், உயர்வான உள்ளங்கள் உயர்ந்த ஸ்தானங்களில், திருச்சிலுவை, காவல் தூதர்கள், புனித பிரான்சிஸ்கு சவேரியார், புனித தோமையர், கிராமத்தின் பல்வேறு இடங்களில் காணப்படும் சொரூபங்கள், வெற்றி அன்னை ஆலயம், ஆலயத் திருவிழா மக்களின் பெருவிழா, தங்கத் தேர்மிசை தாய்க்கன்னி மரியாள், தனித்துவம் பேணும் கலைவடிவம் (திருப்பாடுகளின் காட்சி) ஆகிய விபரங்கள் பதிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பிரிவான மறையாட்சி என்ற பிரிவில் கொச்சின் யாழ். மன்னார் மறைவட்ட சேவையின்கீழ் பேசாலை, யாழ். மன்னார் மறைவட்ட ஆயர்களும் சேவைகளும், பேசாலை பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்களும் அளப்பரிய சேவைகளும், பேசாலையின் குருமாமணிகளும் குலத்தீபங்களும் ஆகிய விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன. நான்காவது பிரிவில் தொழில் வளர்ச்சியில் முதிர்ச்சி, கல்வியின் தோற்றமும் முன்னேற்றமும், கலை கலாசார அபிவிருத்தி, தேச வழமைகளும் சம்பிரதாயங்களும் ஆகிய பிரவுகளின்கீழ் விரிவான ஆவணப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47681).