வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, ஜுலை 2014. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி).
(10), 194 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-41392-0-6.
ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் யாழ்ப்பாணத்து நினைவுகள் எனும் தொடரில் வெளிவந்த ஆக்கங்களில் சிலவற்றைத் தொகுத்து, இப்பாகம் வெளிவந்திருக்கின்றது. 30 வகையான தலைப்புகளின் கீழ், யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியல், கலாசாரம், பண்பாடு, தொழில் முறைமை போன்றவற்றை அனுபவ வாயிலாக இக்கட்டுரைகள் விளக்குகின்றன. சந்தைகளுடன் பிணைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை, நினைவுகளில் நிற்கும் தட்டிவான், சமூகக் கூட்டுறவும் யாழ்ப்பாண மக்களும், திருமணப்பந்தல் முதல் திருமண மண்டபம் வரை, சமூக எழுச்சியில் பணவரவு வைபவம், போர்க்கால அச்சுத்தொழில், கிளாலிப் படகும் தென்பகுதிப் பயணங்களும், மே தினமும் சினிமாத் தியேட்டர்களும், கப்பல்களும் பயணங்களும், விமானங்களும் எமது பயணங்களும், போர்க்காலம் கற்றுத் தந்த சொற்கள், அருகிவரும் சிறுவர் விளையாட்டுக்கள், கொம்படி ஊரியான் பாதையும் பயணங்களும், போர்க்கால வாழ்வாதாரத் தொழில்கள், அருகிவரும் கைத்தொழில்கள், கிராமிய வறுமை தணித்த அற்ஹோம் முறைமை, வாகனங்களும் வாழ்வியலும், உலக சாதனை முயற்சிகள் மீளும் நினைவுகள், யாழ்ப்பாணத்தில் ஷம்பூ இல்லாத காலம், வானொலியும் யாழ்ப்பாணத்தவரும், காலவெள்ளத்தில் கரைந்துபோன தொழிற்சாலைகள், வெற்றிலையும் எம்மவரும், சனசமூக நிலையங்களும் சமூகமும், கிணறும் வாழ்வியலும், சினிமாப்பாடல் புத்தக காலங்களில், பொப்பிசைப் பாடல் யுகத்தில், துலா மிதித்தல் காலம், இசைக்குழுக்களின் காலங்களில், துறைமுகப் பட்டினமொன்றின் கதை, சவாரிப் போட்டிக் காலங்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூலிலுள்ள 30 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் உருவாக்கிவிட்ட பாரம்பரியக் கலாச்சாரங்கள், சின்னங்கள் என்பவை பற்றிய மீள்நினைவூட்டலாக இக்கட்டுரைகள் அமைகின்றன.