11993 விதைத்ததில் விளைந்தது: வலி கிழக்கு வலம்- பாகம் 01.

மாணிக்கம் ஞானலிங்கம். அச்சுவேலி: அபிராமி பதிப்பகம், அபிராமி மஹால், அச்சுவேலி தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்டேர்ஸ், 356 ஏ, லக்ஸன் பிளாசா கட்டிடம், கஸ்தூரியார் வீதி).

(2), xii, 388 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 740., அளவு: 20×14 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆகக்கூடிய மக்கள் வாழும் பிரிவாக 104.36 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை உள்ளடக்கியது. 2009அம் ஆண்டு நவம்பரில் நிழ்த்தப்பட்ட குடித்தொகைக் கணக்கீட்டின்படி 23145 குடும்பங்களையும் 77407 மக்களையும் கொண்டு விளங்குவது வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகப் பிரவாகும். இப்பிரதேசம் உள்ளுராட்சி அமைப்பில் வலி கிழக்குப் பிரதேச சபையின் அச்சுவெலி உப அலவலகம், புத்தூர் உப அலுவலகம், நீர்வேலி உப அலுவலகம், கோப்பாய் உப அலுவலகம், உரும்பிராய் உப அலுவலகம் என ஐந்து உப அலுவலகங்களைக் கொண்டது. வலிகாமம் பெரும் பிரிவின் கிழக்குத் திசையில் அமைந்திருப்பதனால் வலி கிழக்குப் பிரிவு என்று அழைக்கப்படும் வலி-கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் அமைப்புகளின் வரலாற்றை பதிவுசெய்யும் உசாத்துணை ஆவண நூல் இது. மருத்துவ சேவை, சேவை நிலையங்கள், கல்விக் கூடங்கள், அரச நிர்வாக அலகுகள், ஆலயங்கள், கூட்டுறவு அமைப்புகள், கிராமங்களும் சனசமூக நிலையங்களும், நிலவரைகள்ஆகிய எட்டு இயல்களின்கீழ் 82 விரிவான தகவல் பதிவுகள் இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 243306). 

ஏனைய பதிவுகள்

13870 ஈழத்து மண் மறவா மனிதர்கள்.

வி.ரி.இளங்கோவன். மதுரை 625018: தழல் பதிப்பகம், FF-3,A-பிளாக், R.S.L. கோல்டன் அபார்ட்மென்ட்ஸ், திண்டுக்கல் பிரதான சாலைஇ விளாங்குடிஇ 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (மதுரை 625 002: மதுரை ஆர்ட்ஸ் அன்ட் ஸ்கிரீன்ஸ், செல்லூர்).